இந்தியாவிலிருந்து முதன் முறையாக யு டியூப் சேனலில், ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்து, பஞ்சாபி படப் பாடல் ஒன்று சாதனை புரிந்துள்ளது.
அம்பர்தீ சிங் இயக்கி, நடித்து வெளியான படம் லாவுங் லாச்சி. 2018 மார்ச்சில் வெளியான இந்தப் படத்தில், ஆமி விர்க், நீரு பாஜ்வா, அம்ரிட் மான், நிர்மல் ரிஷி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு குர்மீத் சிங் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தின் லாவு லாச்சி என்ற பாடல், யு டியூப் சேனலில் அதே தலைப்பிலேயே வெளியானது. இணையத்தில் வெளியிடப்பட்டதிலிருந்தே பெரும் வைரலாகத் தொடங்கியது. இந்தியாவிலிருந்து யுடியூப் சேனலில் சாதனை புரிந்த பாடல்களின் சாதனைகளைத் தொடர்ச்சியாக முறியடித்து வந்தது.
தற்போது இந்தியாவிலிருந்து, யு டியூப் சேனலில், ஒரு1 பில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் என்ற மிகப் பெரிய சாதனையை, இந்தப் பாடல் படைத்துள்ளது. இதற்குப் படக் குழுவினர் சந்தோஷம் தெரிவித்துள்ளனர்.

