இசையமப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் ரைஸா நடித்துள்ளனர். ஆகஸ்ட் 9 அன்று வெளியாகியுள்ள இந்தப்படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓப்பனிங் இல்லை.
இந்நிலையில், இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, இந்தத் திரைப்படத்தைக் கலாச்சாரச் சீரழிவு என்று கூறலாம் என்று தைரியமாக கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
படத்தின் கதைப்படி ரைசாவைக் காதலிக்கிறார் ஹரிஷ் கல்யாண். ரைசாவோ அவரது காதலை ஏற்க மறுக்கிறார். ஆனால் அவரோடு செக்ஸ் வைத்துக் கொள்கிறார். ரைசாவை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார் ஹரீஷ் கல்யாண். ஆனால் அவரோ கல்யாணம் வேண்டாம், லிவிங் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.
இதுபோன்ற கலாச்சார சீரழிவுகளை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ‘பியார் பிரேமா காதல்’ படத்தை பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதோடு, இந்தப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிப்பதால், இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படிப்பட்ட படத்தை தயாரிப்பதா? என்று சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.

