தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியில் இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர், தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருவதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2014ல், தான் நீண்ட காலமாக காதலித்து வந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தாலும், கணவர் வீட்டாருக்கு, திவ்யதர்ஷினி சினிமாவில் நடிப்பதும், இரவு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வருவதும் பிடிக்கவில்லை.
இதனால் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் மூலம், திவ்யதர்ஷினியை நடிக்கக் கூடாது என கட்டளை போட்டனர். இதனால், கோபமானார் திவ்யதர்ஷினி. இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். தனித்தனியாக வசித்து வந்தவர்கள், ஒரு கட்டத்தில் கோர்ட் மூலம் விவகாரத்தும் பெற்றனர்.
இந்நிலையில், தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய திவ்யதர்ஷினி, வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார்.

