மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியர் ஏகே.சாஜன்.. பல முன்னணி நடிகர்களின் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய இவர், ஒரு சில படங்களையும் இயக்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மம்முட்டி, நயன்தாராவை வைத்து புதிய நியமம் என்கிற படத்தை இயக்கினார். படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் அதில் சொல்லப்பட்ட சமூக விழிப்புணர்வு கருத்துக்காக ஓரளவு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இந்த நிலையில் பிரேமம் புகழ் ஷராபுதீனை ஹீரோவாக்கி ‘நீயும் நானும்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஏகே.சாஜன். அனு சித்தாரா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளை வெளியாக உள்ள இந்தப் படத்தில் மோகன்லாலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்கிற செய்து இப்போது கசிந்துள்ளது.
படம் வெளிவரும் வரை இந்த செய்தியை சஸ்பென்சாக வைத்திருக்க இயக்குனர் திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் நாயகி அனு சித்தாரா ஆர்வமிகுதியால் மோகன்லாலுடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சஸ்பென்சை உடைத்துவிட்டார்.

