Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மோகன்லால் பட செட்டிற்கு விசிட் அடித்த அஜித்

February 16, 2019
in Cinema
0

மோகன்லால் தற்போது மலையாளத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிவரும் ‘மரைக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்கிற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பிரியதர்சன் இயக்கிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது.

இவர்களது படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலேயே அஜித் தற்போது நடிக்கும் ‘பிங்க்’ ரீமேக் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.. இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டு நடித்து வருகிறார். முன்னதாக நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஜித், அருகில் மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து அங்கே திடீர் விசிட் அடித்துள்ளார்.

அங்கே இயக்குனர் பிரியதர்ஷனை சந்தித்து, சிறிது நேரம் படம் குறித்த விபரங்களை கேட்டறிந்து, தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து விட்டு கிளம்பினாராம் அஜித். அவரது சர்ப்ரைஸ் விசிட்டால் ஆச்சரியமடைந்த படக்குழுவினர் அவருடன் போட்டி போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து விஜய், சூர்யா இருவரும் மோகன்லாலுடன் இணைந்து நடித்தது போல அஜித்தும் விரைவில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவேண்டும் என தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் மோகன்லால் ரசிகர்கள்..

Previous Post

அப்பா பொறுமையாக இருந்திருக்கலாம் : கார்த்தி

Next Post

தன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா

Next Post

தன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures