கடந்த சில மாதங்களாகவே மலையாள திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வந்தது இளம் நடிகர் ஷேன் நிகம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இடையே நடைபெற்று வந்த மோதல் தான். ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த படங்களில் கூடுதல் சம்பளம் கேட்டு நடிக்க மறுத்து அந்த படங்களுக்கான தனது கெட்டப்பையும் மாற்றிக்கொண்டு அதிர்ச்சி அளித்தார் நாயகன் ஷேன் நிகம்.
இதைத்தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என மாறிமாறி பேசியும் தீர்வு எட்டப்படவில்லை இதை அடுத்து அவர் நடித்து வந்த இரண்டு படங்களும் கிடப்பில் போடப்பட்டதாக தயாரிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஷேன் நிகமுக்கு தயாரிப்பாளர் சங்கத்தால் மறைமுகமான ரெக்கார்டும் போடப்பட்டது இந்த நிலையில் வெளிநாடு சென்றிருந்த மோகன்லால் திரும்பி வந்ததும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நடிகர் சங்கத்தில் கூறப்பட்டது.
அதன்படியே வெளிநாடு சென்று திரும்பி வந்த மோகன்லால். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஷேன் நிகம் இருவரையும் அழைத்து பேசி இதற்கு சுமுகமான ஒரு உடன்பாடு ஏற்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது ஷேன் நிகம் பிரச்சினையால் நிறுத்தப்பட்ட படங்கள் மீண்டும் துவங்கும் என்றும் அதில் ஷேன் நிகம் மீதி உள்ள காட்சிகளை நடித்துக் கொடுப்பார் என்றும் மோகன்லால் உத்தரவாதம் அளித்துள்ளதை தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

