மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுக்கு சமமாக, ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் மிரட்டலான வேடத்தில் நடித்து இருந்தார் ஆஷா சரத். 40 வயதுக்கு மேல் சினிமாவில் நுழைந்தாலும், மோகன்லால், மம்முட்டி என, முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் இவரை அவ்வப்போது தேடிவருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே மோகன்லாலுடன் கர்மயோதா மற்றும் 1971; பியாண்ட் தி பார்டர்ஸ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார் ஆஷாசரத். இந்தநிலையில் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் ட்ராமா என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் ஆஷாசரத். இதில் இவர்கள் சேர்ந்து நடிக்கும் மூன்றாவது படம் ஆகும். இந்த ட்ராமா படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

