கடந்த ஆண்டு மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் முன்னணி நடிகரான திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கைதாகி, சிறை சென்று, தற்போது ஜாமினில் வெளிவந்து படத்தில் நடித்து வருகிறார். அந்த சமயத்தில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப், நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றபின், அவரை மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவிற்கு நடிகைகளின் தரப்பிலிருந்து மிக பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சில நடிகைகள் இந்த முடிவை எதிர்த்து சங்கத்தில் இருந்து விலகியிருக்கிறார்கள். பார்வதி, ரேவதி போன்றோர் இந்த முடிவை மாற்றும்படி நடிகர் சங்கத்துடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், திலீப் தன்னால் சர்ச்சை ஏற்படுவதை விரும்பாத திலீப் மோகன்லாலுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்து விட்டாராம். வரும் நவ-24ஆம் தேதி கூடவுள்ள பொதுக்குழுவில் இந்த கடிதத்தின் மீதான முடிவு எடுக்கப்படும் என சங்க உறுப்பினரும் மூத்த நடிகருமான சித்திக் கூறியுள்ளார்