இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், கடைசி நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 317 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 258, வெஸ்ட் இண்டீஸ் அணி 427 ரன்கள் எடுத்தன.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் (72), மாலன் (61), ஸ்டோக்ஸ் (58), மொயீன் அலி (84), வோக்ஸ் (61) என, வரிசையா அரைசதம் அடித்தனர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 490 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.
பின், 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நான்காவது நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து, 317 ரன்கள் பின்தங்கியிருந்தது.