சீமராஜா படத்தை அடுத்து ராஜேஷ்.எம் இயக்கும், மிஸ்டர் லோக்கல் மற்றும் ரவிக்குமார், பி.எஸ்.மித்ரன் இயக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் மே 1ந்தேதி வெளியாகிறது.
மேலும், கனா படத்தை அடுத்து, கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் சரவணன் மீனாட்சி ரியோ ராஜ், ஷிரின் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கி விட்டது. அதனால் இந்த படத்தையும் மே மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

