தன்னைத் தானே சூப்பர் மாடல் என அழைத்துக் கொள்ளும் மீரா மிதுன், அவ்வப்போது ஏதாவது சர்ச்சைக்குரிய டுவீட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். திரையுலகைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில், மீரா மிதுனின் டுவிட்டர் பக்கத்தில், அவர் இறந்து விட்டதாகவும், பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், போலீஸ் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் வெளியாகியுள்ள பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம் போல பரபரப்பை ஏற்படுத்துவதற்காக மீராவே இந்தப் பதிவை வெளியிட்டாரா அல்லது அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதா என்பது பற்றி தெரியவில்லை. ஆனாலும் வழக்கம் போல், மீரா மிதுனின் இந்தப் பதிவையும் கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் பதில் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

