இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன், இசை அமைப்பாளராக அறிமுகமாகி பிறகு காமெடி நடிகர் ஆனார். அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் இவர் ஆஸ்தான நடிகராக இருந்தார். இடையிடையே சில படங்களுக்கு இசை அமைக்கவும் செய்தார். மாங்கா என்ற படத்தில் சோலோ ஹீரோவானார். அந்த படமும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் மீண்டும் ஹீரோவாகி இருக்கிறார் பிரேம்ஜி அமரன். விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்குகிறார். ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, கு.ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன், ஹலோ கந்தசாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்கிறார். சமீர் பரத்ராம் தயாரிக்கிறார்.
படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது முழு நீள காமெடி படம். ஒரு சின்ன வாய்க்கா வரப்பு சண்டைக்காக போலீஸ் நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் அலையும் கிராம மக்களின் கதை.

