சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரிஷா. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அதன் பிறகு ஒரு பாடலுக்கு ஆடினார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கடைசியாக நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இப்போது பயங்கரமான ஆளு என்ற படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். அரசர் ராஜா என்பவர் இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கிறார். சாரா என்பவர் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தஷி இசை அமைத்துள்ளார். செல்வமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் அரசர் ராஜா கூறியதாவது:
நம் இந்திய திருநாடு, சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, சந்திக்க கூடிய சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம் என்றார்.