ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் படத்தில் நடித்தார் த்ரிஷா. அந்த படம் அவரது கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. இந்தநிலையில், 11 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது மீண்டும் ராதாமோகன் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் த்ரிஷா.
ஹிந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான துமாரி சூலு படத்தின் தமிழ் ரீமேக்கை காற்றின்மொழி என்ற பெயரில், ஜோதிகாவை வைத்து இயக்கினார் ராதாமோகன். அதையடுத்து மீண்டும், அவர் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்த பாட்லா படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போகிறார்.
இந்த படத்தில் டாப்சி நடித்த வேடத்தில் த்ரிஷாவையும், அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் பிரகாஷ்ராஜையும் நடிக்க வைக்க பேசி வருவதாக கூறப்படுகிறது.