நடிகை விஜயசாந்தி, ஆரம்பகாலத்தில் பா.ஜ., கட்சியில் இருந்தார். பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் கட்சியில் இணைந்தவர், அங்கு அதிருப்தி நிலவ காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அவர் எதிர்பார்த்த அரசியல் திருப்பங்கள் நிகழாத நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் அவர் மீண்டும் பா.ஜ.,வில் இணைய இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இப்போது பாஜக.,வின் முரளிதரராவ், விஜயசாந்தி உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் பாஜகவில் இணைய சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அக்.,8ல், விஜயசாந்தி, பா.ஜ.வில் இணையும் நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல்.

