ஹிந்தியில் வெளிவந்த ‘பின்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ ஆக வெளிவந்து வெற்றி பெற்றது. அப்படத்தைத் தற்போது தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் பவன் கல்யாண் நடிக்க ரீமேக் செய்து வருகிறார்கள்.
தமிழில் அஜித் ஜோடியாக பிளாஷ்பேக்கில் வித்யா பாலன் நடித்தார். அது போலவே தெலுங்கிலும் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்களாம். அந்த வேடத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு பவன் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். எனவே, அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சம்மதிப்பார் என நினைக்கிறார்களாம்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாண் நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தெலுங்கில் விட்ட இடத்தைப் பிடிக்க ஸ்ருதிஹாசனுக்கு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

