பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் புதுமுக நடிகை இவானா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் நாச்சியார். இப்படத்தின் டீசர் வெளியான சமயத்தில், ஜோதிகா பேசிய வசனம் ஒன்று சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஜோதிகா. படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக வெளியான மற்றொரு டீசரில், ஜோதிகா, “கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு எல்லாம் ஒன்று தான்” என்று கூறுகிறார்.
இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இந்த வசனத்தை உடனே நீக்க வேண்டும், இல்லையேல் நாச்சியார் படத்தை தடை செய்ய வேண்டும், பாலா, ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.