33 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‛ஊமை விழிகள்’. திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்கி இருந்தர். ஆபவாணன் தயாரித்திருந்தார். விஜயகாந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஒளிப்பதிவு, திரைக்கதை உள்ளிட் பல விஷயங்களுக்காக இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்திற்கு பிறகு தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
தற்போது இதே பெயரில் புதிய படம் ஒன்று தயாராகிறது. பிரபுதேவா ஹீரோ. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. வி.எஸ் என்ற புதுமுகம் இயக்குகிறார். விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், காஸிப் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது.
அவர் நடித்து முடித்துள்ள பொன்மாணிக்கவேல், யங் மங் சங் படங்கள் வெளிவர வேண்டிய நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது ஹிந்தியில் தபாங் 3 படத்தை இயக்கி வருகிறார்.

