சீமராஜாவுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். இடையில் வந்த கனாவில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மிஸ்டர்.லோக்கலை ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். ராஜேஷின் கடந்த 3 படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. அதனால் இந்தப் படத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். இது அவருக்கு முக்கியமான படம். நயன்தாரா, ராதிகா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமய்யா, ரோபோ சங்கர், மனோபாலா என பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
கோடீஸ்வர தொழில் அதிபர் நயன்தாராவுக்கும், லோக்கல் பையன் சிவகார்த்திகேயனுக்கு இடையிலான மோதல்தான் கதை. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார், நேற்று முன்தினம் படத்தை பார்த்த தணிக்கை குழு சில வசனங்ளுக்கு மட்டும் மியூட் கொடுத்து யு சான்றிதழ் வழங்கி உள்ளது. வழக்கமாக ராஜேஷ் படத்தில் இடம்பெறும் டாஸ்மாக் காட்சிகள் இந்தப் படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற 17ந் தேதி வெளிவருகிறது.

