மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனு இம்மானுவேல். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டிராஜ் டைரக்ஷனில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாளத்தில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் மட்டுமல்ல, படக்குழுவினரிடம் ரொம்பவே தெனாவெட்டாக நடந்து கொள்வதாலும் இவருக்கு அங்கு வாய்ப்புகள் இல்லை.
இதேபோலத்தான் இயக்குனர் மிஷ்கின் படத்தில் நடித்த போதும் தன்னுடைய ஆணவப்போக்கை தொடர்ந்து மிஷ்கினையே கோபப்படுத்திய நிகழ்வும் நடைபெற்றதாம். சமீபத்தில் வெளியான சைக்கோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இயக்குனர் மிஷ்கினிடம் ஒரே படத்தில் இரண்டு கதாநாயகிகளை வைத்து பணியாற்றியது சிரமமாக இல்லையா என்று கேட்கப்பட்டது..
துப்பறிவாளன் படத்தில் அனு இமானுவேல் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சியை படமாக்கும்போது சீனியர் நடிகை என்ற முறையில் அனு இம்மானுவேலிடம் அவரது பாதுகாப்பிற்காக டிப்ஸ் கொடுத்தார் ஆண்ட்ரியா. அதனால் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என முகத்தில் அடித்தாற்போல் சொன்னாராம் அனு இம்மானுவேல். அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மிஷ்கினுக்கு சுரீரென கோபம் வரவே, அனு இம்மானுவேலின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்கலாமா என்கிற அளவிற்கு சென்று விட்டாராம் மிஷ்கின். ஆனால் நல்ல வேளையாக சைக்கோ படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளும் பக்குவப்பட்ட நடிகைகள் என்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் மிஷ்கின் கூறியுள்ளார்.

