கமர்ஷியல் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஹீரோயிசம் என்றாலும் அந்த ஹீரோயிசத்தை நன்கு தூக்கிப்பிடிக்கும் வில்லனும் இன்னொரு முக்கிய காரணம். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இரும்புத்திரை படத்தில் ஹீரோ விஷாலுக்கு சமமாக வில்லனாக நடித்த அர்ஜுனின் கேரக்டரும் பேசப்பட்டது.
அந்த கேரக்டரை ஹைடெக் வில்லத்தனத்துடன் வடிவமைத்திருந்தார் இயக்குனர் பி.எஸ்.மித்திரன். தற்போது அவரது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்திலும் அர்ஜுன் மிக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை சிவகார்த்திகேயனே உறுதிப்படுத்தி உள்ளார்..
