லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று வெளியானது. போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே அது காப்பி போஸ்டர் என சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கிண்டலடிக்கப்பட்டது. இதற்கு முன், அது போன்ற டிசைனில் வெளிவந்த சில படங்களின் போஸ்டர்களை ரசிகர்கள் பதிவிட்டு டிரோல் செய்தனர்.
மாஸ்டர் படத்தின் கதையே கொரியன் படத்தின் காப்பி என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது போஸ்டர்களும் காப்பி என சர்ச்சை எழுந்து வருகிறது. முதலில் வெளியிட்ட போஸ்டர் கூட காப்பியடிக்கப்பட்ட ஒன்று தான் என்றார்கள்.

