வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க ‘மாநாடு’ படத்தின் அறிவிப்பு 2018ம் ஆண்டு ஜுன் மாதமே அறிவிப்பு வெளியானது. பல முறை அந்தப் படம் ‘டிராப்’ என செய்திகள் வந்த போதெல்லாம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவற்றைக் கடுமையாக மறுத்தார்.
ஆனால், கடைசியாக ஆகஸ்ட் மாதம் படம் கைவிடப்படுவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். வேறு நடிகரை வைத்து ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அடுத்து சிம்பு ‘மகா மாநாடு’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்தன.
இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் ‘மாநாடு’ பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சிம்பு தரப்பில் படப்பிடிப்புக்கு சரியாக வருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
கசப்புகளை மறந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு மீண்டும் கூட்டணி அமைப்பார்களா என்பது அவர்களாக அறிவிக்கும் வரை உறுதியற்ற தகவலாகவே இருக்கும்.

