மகாநடி படத்திற்கு பிறகு ஹிந்தியில் அஜய்தேவ்கனுடன் மைதான் மற்றும் தெலுங்கில் மிஸ் இந்தியா படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதில் மிஸ் இந்தியா படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு 50 விதமான தோற்றங்களில் போட்டோ செஷன் நடத்தி அதன்பிறகே கீர்த்தி சுரேஷை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். அதனால் இந்த படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு பக்கா மாடர்ன் வேடத்தில் வருகிறார் கீர்த்தி சுரேஷ். புதுமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

