விக்ரமுடன் நடித்த ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கும் கண்ணே கலைமானே படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. அதோடு, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி, குயின் ரீமேக் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தமிழை விட தெலுங்கில் இன்னும் பிசியாகவே இருக்கும் தமன்னா, வெங்கடேஷ் – வருண்தேஜ் இணையும் ஒரு மல்டி ஹீரோ படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். தற்போதைக்கு எப்-2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. இந்தபடத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.