வளர்ந்து வரும் மலையாள நடிகர் பசில் ஜார்ஜ். கடந்த ஆண்டு வெளிவந்த வெளிவந்த பூவல்லியும் குஞ்சனும் என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வந்தார்.
பசில் ஜார்ஜ் தனது நண்பர்களுடன் கோலஞ்சேரியில் இருந்து காரில் முவட்டபுழா சென்று கொண்டிருந்தனர். இரவு சுமார் 9 மணி அளவில் மெக்கடாமு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், மின் கம்பத்தில் மோதியுள்ளது. அதன் பிறகு அங்கு இருந்த ஒரு கட்டிடத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் மற்றும் கார் மோதிய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ட்டனர்.
செல்லும் வழியிலேயே பசில் ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பரிதாபமா க உயிரிழந்தனர். கொரோனா ஊடரங்கு காலம் என்பதால் போக்குவரத்து இல்லாத சாலையில் அதிகவேமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.