கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சாய் பிரியா என்கிற சாரா தேவா. இந்தப்படத்தில் பிளாஸ்பேக்கில் ஷக்தியின் ஜோடியாக இவர் நடித்திருந்தார். அக்மார்க் தமிழ்ப் பெண்ணான இவர், தற்போது மலையாளத்தில் முதன்முறையாக நுழைந்து ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்துவிட்டார்.
இளம் முன்னணி நாயகனான டொவினோ தாமஸ், ஹீரோவாக நடித்துள்ள ‘எண்ட உம்மாண்டே பேரு’ என்கிற இந்தப்படம், வரும் டிச-21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் நாயகனின் அம்மாவான ஊர்வசிக்கும், நாயகியான சாய் பிரியாவுக்கும் சமமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். சிவலிங்கா படத்தை தொடர்ந்து ஊர்வசியுடன் மீண்டும் இணைந்து நடித்ததில் சாய் பிரியாவுக்கு ரொம்பவே சந்தோஷமாம்.

