காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு ஹீரோவாக நடிக்கும் படம் அல்டி. மனீஷாஜித் ஹீரோயின். புதுமுகம் உசேன் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசியதாவது:
மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார்.
மிகப்பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு மயில்சாமியும் அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்பு மயில்சாமி வெற்றியடைய வேண்டும். என்றார்.

