மம்முட்டி நடிக்கும் புதிய படமான ‘ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்’ படத்தின் துவக்கவிழா இன்று காலை கேரளாவில் நடைபெற்றது. இதில் பிரபல மலையாள இயக்குனர்கள் ஜோஷி, சித்திக், வைசாக் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமாவில் இருந்து டைரக்டர் ராமும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்.
“திரையுலகில் எனது குருநாதர் என்றால் பாலுமகேந்திரா தான்.. ஆனால் மம்முட்டியை பொறுத்தவரை, ஒரு ரசிகராக இருந்த நான் ‘பேரன்பு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்த பிறகு அவரை எனது இரண்டாவது குருவாக ஏற்றுக்கொண்டேன். அந்த அளவுக்கு சினிமா குறித்து பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ‘பேரன்பு தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது” என பேசினார் இயக்குனர் ராம்.