மம்முட்டி நடிப்பில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள படம் ‘மாமாங்கம்’. 12 வருடங்களுக்கு ஒருமுறை பாரதப்புழா ஆற்றங்கரையில் நடக்கும் திருவிழாதான் மாமாங்கம். இதனை மையப்படுத்தியும் வரலாற்று வீரரான சேவர் என்பவரைப் பற்றியும் தான் இந்த படம் உருவாகியுள்ளது படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிராச்சி தெஹ்லான் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பத்மகுமார் இயக்கியுள்ளார். நவம்பர் 21ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை தற்போது ஆரம்பித்துள்ளார்கள். அதன் முதற்கட்டமாக இந்த படத்தின் தீமை மையப்படுத்தி டெம்பிள் ரன் போன்ற ஒரு ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி உள்ளனர். இன்று பிரபல இயக்குனர்கள் பி உன்னிகிருஷ்ணன் மற்றும் ராம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆண்ட்ராய்டு கேமை மம்முட்டி வெளியிட்டார். இளைஞர்களை கவரும் வகையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது

