பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் செய்த கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் மறக்குமா, மறக்கத் தான் முடியுமா? அதிலும் நமீதாவை கட்டிப்பிடித்தாரே அதை தான் மறந்துவிடுவார்களா பார்வையாளர்கள்?
ஒரு சினேகன், ஜூலி, காயத்ரி, ட்ரிக்கர் இல்லாமல் பிக் பாஸ் 2 சீசன் ரொம்பவே போர் அடிக்கிறது. காயத்ரி ரகுராமை திட்டியவர்கள் கூட தற்போது அவரை ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த சீசன் மொக்கையாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன், காயத்ரி, மமதி சாரி ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

