Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்

January 17, 2020
in Cinema
0

இலங்கையின் கண்டியில் 1917 ஜன., 17ல் பிறந்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். தந்தையின் வேலை நிமித்தமாக கேரளாவில் குடியேறினார். தந்தை மறைவுக்கு பின், தாய்மற்றும் சகோதரருடன் தமிழகத்தின் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., வருமானத்திற்காக சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து நாடகங்களில் நடித்தார்.

அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தார். சினிமாக்களில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் ஒரு கொள்கையாக கொண்டிருந்தார்.

பின் 1972 அக்.,17ல் அ.தி.மு.க.,வை தொடங்கினார். போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலில் (1977) இவரது கட்சி வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980ல் இரண்டாவது முறை முதல்வரானார். 1984 தேர்தலில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பிரசாரத்தில் ஈடுபட முடியாவிட்டாலும், மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கால் வெற்றி பெற்று மூன்றாவது முறை முதல்வரானார். 1987வரை 10 ஆண்டுகள் தொடர்ந்துமுதல்வராக இருந்த இவர்,பதவியில் இருக்கும் போதே உடல்நலக்குறைவால் 1987டிச., 24ல் மறைந்தார்.

இறப்பு : 24.12.1987

2017 ஜன. 17: எம்.ஜி.ஆரின் நுாறாவது பிறந்த தினம்.

எம்.ஜி.ஆர்., நடித்து வெளிவந்த திரைப்படங்கள்
1.சதிலீலாவதி – துணை நடிகர்
2.இரு சகோதரர்கள் – துணை நடிகர்
3.தக்ஷயக்ஞம் – துணை நடிகர்
4.வீர ஜெகதீஷ் – துணை நடிகர்
5.மாய மச்சீந்திரா – துணை நடிகர்
6.பிரகலாதா – துணை நடிகர்
7.வேதவதி அல்லது சீதா ஜனனம் – துணை நடிகர்
8.அசோக் குமார் – துணை நடிகர்
9.தமிழறியும் பெருமாள் – துணை நடிகர்
10.தாசிப்பெண் – துணை நடிகர்
11.ஹரிச்சந்திரா – துணை நடிகர்
12.சாலி வாகணன் – துணை நடிகர்
13.மீரா – துணை நடிகர்
14.ஸ்ரீமுரகன் – துணை நடிகர்
15.ராஜகுமாரி – கதாநாயகன்
16.பைத்தியக்காரன் – துணை நடிகர்
17.அபிமன்யூ – துணை நடிகர்
18.ராஜமுக்தி – துணை நடிகர்
19.மோகினி – துணை நடிகர்
20.ரத்னகுமார் – துணை நடிகர்
21.மருதநாட்டு இளவரசி – கதாநாயகன்
22.மந்திரி குமாரி – கதாநாயகன்
23.மர்மயோகி – கதாநாயகன்
24.சர்வாதிகாரி – கதாநாயகன்
25.அந்தமான் கைதி – கதாநாயகன்
26.குமாரி – கதாநாயகன்
27.என் தங்கை – கதாநாயகன்
28.நாம் – கதாநாயகன்

29.ஜெனோவா – கதாநாயகன்
30.பணக்காரி – கதாநாயகன்
31.மலைக்கள்ளன் – கதாநாயகன்
32.கூண்டுக்கிளி – கதாநாயகன்
33.குலேபகாவலி – கதாநாயகன்
34.அலிபாபாவும் 40 திருடர்களும் – கதாநாயகன்
35.மதுரைவீரன் – கதாநாயகன்
36.தாய்க்குப் பின் தாரம் – கதாநாயகன்
37.சக்கரவர்த்தித் திருமகள் – கதாநாயகன்
38.ராஜராஜன் – கதாநாயகன்
39.புதுமைப்பித்தன் – கதாநாயகன்
40.மகாதேவி – கதாநாயகன்
41.நாடோடி மன்னன் – கதாநாயகன்
42.தாய் மகளுக்குக் கட்டிய தாலி – கதாநாயகன்
43.பாக்தாத் திருடன் – கதாநாயகன்
44.ராஜா தேசிங்கு – கதாநாயகன்
45.மன்னாதி மன்னன் – கதாநாயகன்
46.அரசிளங்குமரி – கதாநாயகன்
47.திருடாதே – கதாநாயகன்
48.சபாஷ் மாப்ளே – கதாநாயகன்
49.நல்லவன் வாழ்வான் – கதாநாயகன்
50.தாய் சொல்லைத் தட்டாதே – கதாநாயகன்
51.ராணி சம்யுக்தா – கதாநாயகன்
52.மாடப்புறா – கதாநாயகன்
53.தாயைக் காத்த தனயன் – கதாநாயகன்
54.குடும்பத் தலைவன் – கதாநாயகன்
55.பாசம் – கதாநாயகன்

56.விக்கிரமாதித்தன் – கதாநாயகன்
57.பணத்தோட்டம் – கதாநாயகன்
58.கொடுத்து வைத்தவள் – கதாநாயகன்
59.தர்மம் தலைகாக்கும் – கதாநாயகன்
60.கலையரசி – கதாநாயகன்
61.பெரிய இடத்துப் பெண் – கதாநாயகன்
62.ஆனந்த ஜோதி – கதாநாயகன்
63.நீதிக்குப் பின் பாசம் – கதாநாயகன்
64.காஞ்சித் தலைவன் – கதாநாயகன்
65.பரிசு – கதாநாயகன்
66.வேட்டைக்காரன் – கதாநாயகன்
67.என் கடமை – கதாநாயகன்
68.பணக்காரக் குடும்பம் – கதாநாயகன்
69.தெய்வத்தாய் – கதாநாயகன்
70.தொழிலாளி – கதாநாயகன்
71.படகோட்டி – கதாநாயகன்
72.தாயின் மடியில் – கதாநாயகன்
73.எங்க வீட்டுப் பிள்ளை – கதாநாயகன்
74.பணம் படைத்தவன் – கதாநாயகன்
75.ஆயிரத்தில் ஒருவன் – கதாநாயகன்
76.கலங்கரை விளக்கம் – கதாநாயகன்
77.கன்னித்தாய் – கதாநாயகன்
78.தாழம்பூ – கதாநாயகன்
79.ஆசை முகம் – கதாநாயகன்
80.அன்பே வா – கதாநாயகன்

81.நான் ஆணையிட்டால் – கதாநாயகன்
82.முகராசி – கதாநாயகன்
83.நாடோடி – கதாநாயகன்
84.சந்திரோதயம் – கதாநாயகன்
85.தாலி பாக்கியம் – கதாநாயகன்
86.தனிப்பிறவி – கதாநாயகன்
87.பறக்கும் பாவை – கதாநாயகன்
88.பெற்றால்தான் பிள்ளையா – கதாநாயகன்
89.தாய்க்குத் தலைமகன் – கதாநாயகன்
90.அரசகட்டளை – கதாநாயகன்
91.காவல்காரன் – கதாநாயகன்
92.விவசாயி – கதாநாயகன்
93.ரகசிய போலீஸ் 115 – கதாநாயகன்
94.தேர்த்திருவிழா – கதாநாயகன்
95.குடியிருந்த கோயில் – கதாநாயகன்
96.கண்ணன் என் காதலன் – கதாநாயகன்
97.புதிய பூமி – கதாநாயகன்
98.கணவன் – கதாநாயகன்
99.ஒளி விளக்கு – கதாநாயகன்
100.காதல் வாகனம் – கதாநாயகன்
101.அடிமைப் பெண் – கதாநாயகன்
102.நம் நாடு – கதாநாயகன்
103.மாட்டுக்கார வேலன் – கதாநாயகன்
104.என் அண்ணன் – கதாநாயகன்
105.தலைவன் – கதாநாயகன்
106.தேடிவந்த மாப்பிள்ளை – கதாநாயகன்
107.எங்கள் தங்கம் – கதாநாயகன்
108.குமரிக் கோட்டம் – கதாநாயகன்
109.ரிக்ஷாக்காரன் – கதாநாயகன்
110.நீரும் நெருப்பும் – கதாநாயகன்
111.ஒரு தாய் மக்கள் – கதாநாயகன்
112.சங்கே முழங்கு – கதாநாயகன்
113.நல்ல நேரம் – கதாநாயகன்
114.ராமன் தேடிய சீதை – கதாநாயகன்
115.நான் ஏன் பிறந்தேன் – கதாநாயகன்
116.அன்னமிட்ட கை – கதாநாயகன்
117.இதய வீணை – கதாநாயகன்
118.உலகம் சுற்றும் வாலிபன் – கதாநாயகன்
119.பட்டிக்காட்டுப் பொன்னையா – கதாநாயகன்
120.நேற்று இன்று நாளை – கதாநாயகன்
121.உரிமைக்குரல் – கதாநாயகன்
122.சிரித்து வாழ வேண்டும் – கதாநாயகன்
123.நினைத்ததை முடிப்பவன் – கதாநாயகன்
124.நாளை நமதே – கதாநாயகன்
125.இதயக்கனி – கதாநாயகன்
126.பல்லாண்டு வாழ்க – கதாநாயகன்
127.நீதிக்குத் தலைவணங்கு – கதாநாயகன்
128.உழைக்கும் கரங்கள் – கதாநாயகன்
129.ஊருக்கு உழைப்பவன் – கதாநாயகன்
130.நவரத்தினம் – கதாநாயகன்
131.இன்று போல் என்றும் வாழ்க – கதாநாயகன்
132.மீனவ நண்பன் – கதாநாயகன்
133.மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – கதாநாயகன்
134.அவசர போலீஸ் 100 – துணை நடிகர்
135.நல்லதை நாடு கேட்கும் – துணை நடிகர்

Previous Post

எம்.ஜி.ஆர் ஆக அசத்தும் அரவிந்த்சாமி

Next Post

இலியானாவின் மிக மோசமான பழக்கம்

Next Post

இலியானாவின் மிக மோசமான பழக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures