கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்குனர் வைசாக் டைரக்சனில் மம்முட்டி, பிருத்விராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா படம் வெளியாகி ஹிட்டானது. அந்தப்படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் மதுர ராஜா பட அறிவிப்பு வெளியானது. புலி முருகன் படத்தை தொடர்ந்து வைசாக் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்குவதாகத்தான் இருந்தது.
ஆனால் சமீபத்திய மழைவெள்ளம் கேரளாவின் சூழலையே அடியோடு மாற்றிவிட இந்தப்படத்தின் படப்பிடிப்பும் தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வெள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமும் ஊக்கமும் அளித்து வந்த மம்முட்டி, இன்றுமுதல் இந்த பட்டப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.