சன் டி.வி.,யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. பின், அவர் விஜய் டி.வி.,க்குச் சென்றார். தற்போது, அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியைத் தாண்டி, பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் துவங்கி இருக்கிறார்.
இது குறித்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு மிக மிக நன்றாகத் தெரிந்தது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணி. ஆனால், எனக்கு அவ்வளவாக நடிக்கத் தெரியாது. இருந்தாலும், அதிலும் காலடி எடுத்து வைக்கிறேன். எல்லோரும் என்னை வாழ்த்துங்கள்.
இவ்வாறு மணிமேகலை கூறியிருக்கிறார்.

