கடந்த செப்-25ல் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் மற்றும் வயலினிஸ்ட்டான பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி, குழந்தை பயணித்த கார் திருவனந்தபுரம் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்கும் நினைவு திரும்பாத நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இசையமைப்பாளர் பாலா பாஸ்கரும் இறந்தார். இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டாத நிலையில் நினைவு திரும்பாத அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளை தொடர்ந்து தந்தையும் உயிரிழந்தது மலையாள திரையுலகில் இன்னு சோகத்தை அதிகமாக்கியுள்ளது.