பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்தும், இன்னும் முன்னணி நடிகராக தொடர போராடி வருகிறார் நகுல். சமீபத்தில் வெளியான செய் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நகுல், தனது 3வது திருமணநாளை கொண்டாடும் விதமாக மனைவிக்கு விலையுர்ந்த ஐபோனை பரிசாக கொடுக்க எண்ணினார். இதற்காக ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை, ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து இருந்தார்.
அதன்படி ஐபோனும் அவரது வீட்டிற்கு வந்துள்ளது. அவர் வெளியூரில் இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் வாங்கி வைத்துள்ளனர். இரண்டுநாள் கழித்து பார்சலை பிரித்து போர்த்த நகுலுக்கு பேர் அதிர்ச்சி. அது தான் ஆர்டர் செய்திருந்த விலையுர்ந்த ஐபோனே அல்ல, மலிவு விலை போன் உள்ளே இருந்திருக்கிறது. இதையடுத்து, பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் தெரிவித்தார். எனினும், இப்பிரச்னையை தீர்க்காமல் அவர்கள் அலைகழித்துள்ளனர். இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நகுல்.

