Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை; ராதிகா வருத்தம்

February 19, 2019
in Cinema
0

‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘கபாலி’ என கோலிவுட் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். ராதிகா ஆப்தேயின் பெற்றோர், வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் படித்து, அங்கேயே மருத்துவர்களாக பணியாற்றியவர்கள். ராதிகா ஆப்தே பிறந்த பின், அவரது குடும்பம் வேலூரில் இருந்து, புனேவுக்கு குடிபெயர்ந்தனர்.

சிறுவயது முதலே, புனேவில் வளர்ந்ததால், அந்த நகரின் தற்போதைய நிலை குறித்து, அங்கே ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராதிகா ஆப்தே பேசியதாவது:

சாலை விபத்துகள் பற்றி, என் அப்பா மூலம், நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நரம்பியல் நிபுணர். எனவே, எனக்கு சாலை விதிகள் குறித்து, அதிகமாகத் தெரியும். ஹெல்மெட்டை பயன்படுத்துவது போன்ற அடிப்படையான விதிகளை, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

இதை ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்த முடியாது. அவர்கள்தான் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். முன்பு, புனே நகரை சைக்கிளிலேயே சுற்றி வருவோம். இப்போது, என்ன நிலையில் இருக்கிறது என்று பாருங்கள்.

தேவையற்ற நேரங்களில் ஹாரன் ஒலி எழுப்பக் கூடாது, பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன், வேகத்தைக் குறைப்பது, ஹெல்மட் அணிவது போன்ற அடிப்படையான போக்குவரத்து விதிகளைக் கூட மக்கள் பின்பற்றாதது அபாயகரமானது.

இவ்வாறு ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.

Previous Post

ரூ.100 கோடி கிளப்பில் ‘மணிகர்ணிகா’

Next Post

நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன் : ஐஸ்வர்யா ராஜேஷ்

Next Post

நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன் : ஐஸ்வர்யா ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures