பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கெடுத்த நடிகரும், இயக்குநருமான சேரன், அடுத்து விஜய் சேதுபதியை கொண்டு ஒரு படம் இயக்க உள்ளார். இதற்கிடையே அவர் நடித்த ராஜாவுக்கு செக் என்ற படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறத. இவருடன் சிருஷ்டி டாங்கே, சரயு, நந்தனா வர்மா, இர்பார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதை சாய் ராஜ்குமார் இயக்கி இருக்கிறார்.
வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில், ரஜினியின் தர்பார் உள்பட ஒரு சில படங்கள் வெளியாகும் நிலையில் அதைத் தொடர்ந்து, இரு வார இடைவெளிக்குப் பின், ராஜாவுக்கு செக் படம் ஜன., 24ல் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

