‘பேட்மேன்’ பட வரிசையின் அடுத்த படத்தில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ், நாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சூப்பர் சாகச ஹீரோவாக நடிக்கும், பேட்மேன் படங்களுக்கு என, தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதனாலேயே 13க்கும் மேற்பட்ட பேட்மேன் வரிசை படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் வெளியாக இருக்கின்றன. வசூலிலும் இந்தப் படங்கள் தொடர்ந்து சாதித்து வருகின்றன.
இந்நிலையில், பேட்மேன் பட வரிசையில் உருவாகவுள்ள அடுத்த படத்தில், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரும், பாப் பாடகரான நிக் ஜோனாஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான ‘ஜஸ்டிஸ் லீக்’, ‘பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்’, ‘டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ ஆகிய படங்களில் பேட்மேனாக நடித்த பென் அப்லெக் பேட்மேன், அடுத்த படத்தில் நடிக்க மறுத்ததால், நிக் ஜோனாஸுக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
பேட்மேன் அடுத்த படத்தில் யார் நடிக்கலாம் என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நிக் ஜோனாஸ், முதல் பெயர் நிக், கடைசி பெயர் ஜோனாஸ் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பேட்மேன் படமொன்றில் தான் நடிக்க இருப்பது குறித்து ஏற்கனவே, சூசகமாக தகவல் வெளியிட்டிருந்தார்.

