ரஜினியுடன் கார்த்திக் சுப்பராஜ் முதன் முதலாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘பேட்ட’. மற்றொரு சிறப்பு அம்சமாக, ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
இவர்களுடன் பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக், ‘ஆடுகளம்’ நரேன், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
1995 ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ‘பாட்ஷா’ படம் தான் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கடைசி படம். அதன்பிறகு ரஜினி நடிப்பில் வேறு படம் வெளியானதில்லை. 23 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.
இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’, ‘காலா’, ஆகிய இரண்டு படங்களில் ரஜினி ஏற்று நடித்த கேரக்டர்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதுவே காலா படத்தின் தோல்விக்கும் காரணமானது.
‘பேட்ட’ படத்தில், இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. அதுவே பேட்ட படத்தின் வெறிக்கு முதல்காரணமாக அமைந்துவிட்டது. அதேநேரம், 2 மணி நேரம் 52 நிமிடம் என படம் நீளமாக இருந்ததால் பேட்ட படம் போரடிப்பதாக டாக் பரவியதை, பலரும் சுட்டிக்காட்டியதை அடுத்து, 20 நிமிடக்காட்சிகளை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.