ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். அவருடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடு என கூறி வந்தனர். இப்போது ஜன.,9ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.
இந்தாண்டு பொங்கல் புதன் அன்று வருகிறது. அதற்கு ஒருவாரம் முன்னதாக வியாழன் அன்று வெளியிட்டால் ரசிகர்கள் கூட்டம் தவிர்த்து, பேமிலி ஆடியன்ஸ் வரும் என்பதாலும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தொடர்ந்து வசூலை அள்ள வேண்டும் என்ற கருத்தில் கொண்டு, இந்த தேதியில் வெளியிடுகின்றனர்.
கடந்த பொங்கலின் போதும் இதே மாதிரி, ‛பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகி, வசூலை அள்ளின. இப்போதும் அதே பாணியை பின்பற்றுகின்றனர். மேலும், தமிழில் வெளியாகும் அதேநாளில் தர்பார் படத்தை தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தெலுங்கில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் படங்கள் ஜன.,12ல் வெளியாவதாலும் அதை கருத்தில் கொண்டு தர்பார் பட ரிலீஸை மாற்றி உள்ளனர்.

