கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இந்த படம் பொங்கலுக்கு வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்தநிலையில், பேட்ட படத்தின் அப்டேட்ஸ் குறித்து டுவிட்டரில் பகிர்ந்தார் கார்த்திக் சுப்பராஜ்.
பேட்ட முதல் சிங்கிள் டிசம்பர் 3ந் தேதியும், இரண்டாவது சிங்கிள் டிசம்பர் 7ந் தேதியும், மொத்த பாடல்கள் டிசம்பர் 9ந் தேதியும் வெளியாவதாக அறிவித்தவர். பேட்ட படத்தின் ரிலீஸ் தேதியை மறந்து விட்டார்.
இதையடுத்து இன்னொரு டுவீட்டில், பேட்ட ரிலீஸ் தேதியை பதிவிட மறந்து விட்டேன், பேட்ட பொங்கலுக்கு ரிலீசாகிறது என உறுதிப்படுத்தினார் கார்த்திக் சுப்பராஜ்.