மலையாளத்தில் உருவாகியுள்ள ஒரு ஆடார் லவ் என்கிற படத்தில் ஒரு பாடலில் தனது அழகான வித்தியாசமான கண் சிமிட்டல்கள் மூலம் பிரபலமானவர் புருவ அழகி எனப்படும் பிரியா பிரகாஷ் வாரியர். அதன்பின்பு கடந்த ஒரு வருடம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்ட இவர் எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அங்கே இவரை அந்த படத்தில் செய்தது போலவே புருவங்களை சிமிட்ட சொல்லி ரசிகர்கள் கேட்பது வாடிக்கையாகிவிட்டது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்விலும் கூட இதேபோல புருவங்களை சிமிட்டினார் பிரியா வாரியர்.. மேலும், இதுவரை தான் கிட்டத்தட்ட 200 முறைக்கு மேல் இப்படி கண்சிமிட்டல் சமிக்கை செய்து விட்டேன் என கூறியுள்ளார்.
மேலும், ‘தொடர்ந்து அப்படி செய்வதற்கு எனக்கே போரடித்து விட்டது.. வெறும் புருவ அழகி என்கிற பெயரோடு மட்டுமே நின்று விட விரும்பவில்லை. அதையும் தாண்டி அடுத்த இடத்திற்கு செல்ல விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார். இவர் நடித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி மலையாளம், தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியாகிறது.