ஹிந்தியில் மெட்ராஸ் கபே படத்தின் மூலம் அறிமுகமானவர் ராக்ஷி கண்ணா. தெலுங்கிலும் நடித்து பிரபலமானவர், தற்போது தமிழில் சைத்தான் கா பட்சா, இமைக்கா நொடிகள், அடங்க மறு ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் பரபரப்பாக செய்தி பரவியது. விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் றெக்கைக் கட்டி பறந்தன.
இது குறித்து தற்போது ராக்ஷி கண்ணா வாய்த் திறந்திருக்கிறார். அவர் கூறியதாவது:
கிரிக்கெட் வீரர் பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அதைத் தவிர அவரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அவரை இது நாள் வரையில், நான் நேரில் கூட சந்தித்ததில்லை. மற்றபடி, பும்ராவையும் என்னையும் வைத்து பரப்பப்படும் செய்திகள் அனைத்துமே வதந்திகள்தான்.
இவ்வாறு ராக்ஷி கண்ணா கூறியுள்ளார்.