தற்போது தமிழில் குயின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இந்தபடம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. தெலுங்கில், நடிகர் நானி தயாரிக்கும் அவே படத்தில் லீடு ரோலிலும், கல்யாண்ராம் நடிக்கும் எம்எல்ஏ படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் ஒரு புதுமுக நடிகருடன் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தின் கதை காஜல் அகர்வாலை சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளதாம். அந்த கதாபாத்திரம் தன்னை கவர்ந்ததால் தான் புதுமுக நடிகருடன் அந்த படத்தில் டூயட் பாட ஒத்துக்கொண்டுள்ளாராம் காஜல்அகர்வால்.