டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 700 ஓட்டங்களை அதிக முறை குவித்த அணி என்ற சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.
இலங்கை – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 713 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 700 ஓட்டங்கள் மற்றும் அதற்கு மேல் ஒரு இன்னிங்சில் அதிக முறை குவித்த அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.
அந்த அணி இதுவரை 6 முறை 700 ஓட்டங்களை தாண்டியுள்ளது.
இந்த பட்டியலில் அவுஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளன.
மூன்று அணிகளும் நான்கு முறை 700 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி மூன்று முறையும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் 700 ஓட்டங்களை எடுத்துள்ளன.