விரைவில் தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ள கமல், புதிய இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளார்.
தனது அரசியல் பயணத்திற்கு “நாளை நமதே” என பெயரிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் கமல். இதன் அடுத்த கட்டமாக, நாளை நமதே என்ற பெயரிலேயே இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.
தன்னார்வலர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இணையும் வகையில் www.naaalainamadhe.maiam.com இணையதளத்தை துவக்கி உள்ளார். இந்த இணையதளத்தில் தன்னார்வலர், சி.எஸ்.ஆர்., என்.ஜி.ஓ., அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் என 4 பிரிவுகளில் பதிவு செய்யலாம். கல்வி, தொழில், சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, வேளாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளிலும் பதிவு செய்யலாம்.
இந்த இணையதளத்தில் இணைய அனைவருக்கும் டுவிட்டர் மூலம் கமல் அழைப்பு விடுத்துள்ளார். அதில், “கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே…தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே…இணைவதற்க்கு www.naaalainamadhe.maiam.com ” என குறிப்பிட்டுள்ளார்.