தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம், யுத்தம் செய் என பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா. 2017ல் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த அவருக்கு பின்னர் படங்கள் இல்லை. இந்த நிலையில், அவர் புகையிலை விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களை நேரில் சென்று சந்தித்து புகையிலையினால் ஏற்படும் தீங்குகளை விளக்குவதோடு இதனால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பம் எந்ததெந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.