பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். பீகார் மாநிலம், அர்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் மிஸ்ரா. இவர் ராஷ்ட்ரீய சஹாரா என்ற ஹிந்தி பத்திரிகையில் பணியாற்றி வருகிறார்.
இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த பங்கஜ் பாட்னாவில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை சற்று மோசமாக இருப்பதாக தெரிகிறது. கடந்த 5-ஆம் தேதி பெங்களூர் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவத்தை பார்க்கும் போது இது முழுக்க முழுக்க எழுத்து சுதந்திர் மற்றும் கருத்து வெளிபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாகவே கருதப்படுகிறது.