1950 முதல் மனிதர்கள் இதுவரை 8.3 பில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக்களை உருவாக்கி உள்ளனர். இவைகள் இன்று மண்வளத்தையும், இயற்கை சுற்றுசூழலையும் கடுமையாக பாதித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலை., இதனை கண்டுபிடித்துள்ளது. இந்த 8.3 பில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக்களில் 6.3 பில்லியன் டன்கள் கழிவுகளாக ஏற்கனவே வீசப்பட்டுள்ளன. இவற்றில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. 12 சதவீதம் எரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 79 சதவீதம் பிளாஸ்டிக்குகள் மக்காத நிலையில் மண்வளத்தையும், இயற்கையையும் பாதித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் எந்த நிலைக்கும் மாற்ற முடியாததாக உள்ளன. இதனால் மனிதன் கழிவுகளாக தூக்கி எறிந்த பிளாஸ்டி நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளில் மனித இனத்தை அழித்து விடும். 1950 ல் 2 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த பிளாஸ்டிக் உற்பத்தி 2015 ல் 400 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதாகவம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.